அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் தங்கள் இராணுவத்தை அதிகாரப்பூர்வமாக நேற்றிரவு காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றின

 காபூல்


கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க வீரர்களின் கடைசி அணி காபூல் விமானநிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்டது. . இங்கிலாந்தும்.  அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் தங்கள் இராணுவத்தை அதிகாரப்பூர்வமாக நேற்றிரவு காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றின.

இதை தொடர்ந்து தலீபான்கள்  விமான நிலையத்திற்குள் நுழைந்து பல இராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் அமெரிக்காவால் விட்டுச்செல்லப்பட்ட விமானங்களை ஆய்வு செய்தனர்.

தலீபான்கள் அமெரிக்கப் படைகளை நாட்டை விட்டு சென்றதை வரலாற்று தருணம்என்று பாராட்டி, நாடு இப்போது முழு சுதந்திரம்பெற்றுள்ளது என்று கொண்டாடி வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில்  தலீபான்கள்  தங்கள் துப்பாக்கிகளை வானில் வீசி கொண்டாடினர். 

அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி கென்னத் மெக்கன்சி கூறியதாவது:-

காபூலில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் அமெரிக்க படை  அங்குள்ள அமெரிக்காவின் 73 போர் விமானங்கள், நவீன ஏவுகணை தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை செயலற்றதாக்கி விட்டன

 

இந்த விமானங்களால் மீண்டும் பறக்க முடியாது. தலீபான்களால் அவற்றை இயக்கவும் முடியாது. காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிகளில் சுமார் 6 ஆயிரம் அமெரிக்க வீரரகள் ஈடுபடுத்தப்பட்டனர. அவர்கள் கடைசியாக நாடு திரும்புவதற்கு முன்னர் தலா 10 லட்சம் டாலர் மதிப்புள்ள 70 ராணுவ ஆயுத கவச வண்டிகளையும், 27 ஹம்வீஸ் ராணுவ டிரக்குகளையும் செயலற்றதாக மாற்றி விட்டனர்

 

அதே நேரம், காபூலில் இருந்து புறப்படும் வரை பாதுகாப்பு தேவை என்பதால், ராக்கெட் எதிர்ப்பு கருவிகளை மட்டும் அதே நிலையில் விட்டு வைக்கப்பட்டு அதன் பின்னர் செயலற்றதாக மாற்றப்பட்டதாக அவர் கூறினார்.

 

அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் தங்கள் இராணுவத்தை அதிகாரப்பூர்வமாக நேற்றிரவு காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றின அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் தங்கள் இராணுவத்தை அதிகாரப்பூர்வமாக நேற்றிரவு காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றின Reviewed by Tech Mine on August 31, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.